வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
சென்னை: தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின.
ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,550 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 39,697 மாணவ-மாணவிகள் எழுதினர்.

இந்தத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியானது.
மாணவ-மாணவிகள், தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டினைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை,
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பிளஸ் டூ, மார்க் ஷீட்டை www.dge.tn.nic.in என்ற வெப்சைட்டில் இருந்து வரும் 19ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
மே 21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். மறு கூட்டலுக்கு விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுதினம் அவர்கள் பயின்ற பள்ளி வழியே விண்ணப்பிக்கலாம்.
தனியார் மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் வேண்டுவோர், மறு கூட்டலுக்கு இப்போது விண்ணப்பிக்க கூடாது. அவர்களுக்கு பிறகு தேதி ஒதுக்கப்படும். இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கும் பி.இ. உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கவும் தற்போதைக்கு தாற்காலிகச் சான்றிதழ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications