தமிழகமும் கர்நாடகமும் எங்களுக்கு இரு கண்கள்.. சொல்வது நிதின் கட்கரி
தமிழகமும் கர்நாடகமும் எங்களுக்கு இரு கண்கள் போன்றது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகமும் கர்நாடகமும் எங்களுக்கு இரு கண்கள் போன்றது. எனவே, காவிரி விவகாரத்தில் இரு மாநில நலன்களும் பாதுகாக்கும் படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்தார். அப்போது தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், உச்சநீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக முதல்வர் முன்வைத்தார்.
மேலும், தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் திட்டப்பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்கு மத்தியமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அதற்குப்பிறகு, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சோதனை ஓட்டமாக சரக்குக் கப்பல் போக்குவரத்து கடந்த சனிக்கிழமை தொடங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.
பிறகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகமும் கர்நாடகமும் மத்திய அரசின் கண்கள் என்றும், இரு மாநில நலன்களும் பாதுகாக்கப்படும் வகையில் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications