துரைமுருகனை நெருங்கும் இடி; வாரணாசியில் மோடிக்கு எதிராக ஸ்டாலின் பிரச்சாரம்! டெல்லி திகுதிகு

Subscribe to Oneindia Tamil

மணல் கொள்ளை தொடர்பாக வழக்கை வேகப்படுத்தி இருக்கிறது அமலாக்கத்துறை. ஆகவே, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களிடம் இடி 9 மணிநேரம் விசாரணை நடத்தி இருக்கிறது.

முறைப்படி மணல் கொள்ளை தொடர்பான ஆவணங்கள், முறைகேடு தொடர்பான ஆவணங்களை இந்த விசாரணையின் போது 5 ஆட்சியர்களும் அளித்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

TN Lok Sabha Election 2024 MK Stalin is campaigning against Modi in Varanasi

அப்படிப் பார்த்தால், இந்த வழக்கில் பலரது தலைகள் உருளக்கூடும் என்கிறார்கள்.

மேலும் முன்பே சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட சில அமைச்சர்கள் நெருக்கடிகளில் சிக்கலாம் என்கிறார்கள்.

அது தொடர்பாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் அனுபவம் மிக்க மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபாலன் ஒரு டியூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.

அவர் இந்த வழக்கில் அடுத்த கட்ட மூவ் எப்படி இருக்கும் என்பது குறித்து விவரித்திருக்கிறார்.

இது தொடர்பாக டெல்லி ராஜகோபாலன், "மணல் கொள்ளை வழக்கு விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்வேன். நேற்று 5 மாவட்ட ஆட்சியர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர்களிடம் மணல் கொள்ளை தொடர்பான ஆவணங்களை முழுமையாகக் கேட்டுள்ளனர். இதுவே மணல் கொள்ளை வழக்குத் தொடர்பான விசயத்தில் நடந்துள்ள மாபெரும் திருப்பம்தான்.

TN Lok Sabha Election 2024 MK Stalin is campaigning against Modi in Varanasi

பொதுவாகத் தேர்தல் காலங்களில் Model code of conduct என்ற அதிகாரம் உள்ளது. அதைக் காண்பித்துத்தான் இந்த விசாரணையைத் தொடங்கி உள்ளார்கள். இந்த 5 மாவட்ட ஆட்சியர் வாக்குமூலம் கொடுத்தால், அது அப்படியே போய் ஒரு அமைச்சரின் வீட்டுக் கதவைத்தான் தட்டும்.

அந்த அமைச்சர் யார் என்று கேட்டால், திமுக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்தான். அவர் மீதான நடவடிக்கையைத் தேர்தல் தீர்ப்புகள் வருவதற்கு முன்பே எடுக்கப்படலாம். அதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே தெரிகிறது.

அமலாக்கத்துறை கைப்பற்றிய ஆவணங்களை எல்லாம் சரி பார்ப்பார்கள். அது முடிந்ததும் பின்னர் 5 மாவட்ட ஆட்சியர் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட பிறகு, அடுத்த இடம் துரைமுருகன் வீடுதான்.

TN Lok Sabha Election 2024 MK Stalin is campaigning against Modi in Varanasi

அடுத்து தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக அமைச்சரவை எந்த நேரமும் மாற்றி அமைக்கப்படலாம். அதற்குப் பிரதமர் மோடியின் வருகையும் அண்ணாமலை தேர்தல் காட்டிய வேகமும்தான் காரணமாக இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் அனுபவம் மிக்க அரசியல்வாதி. அவருக்கு அதிக அனுபவங்கள் இருந்தாலும் கூட சில நேரங்களில் அவர் தவறிவிடுகிறார்.

ஜூன் 4 வரை தேர்தல்தான் திமுகவின் டார்கெட் ஆக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் வடநாட்டிற்குத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரப் போகிறார் என்று சொல்கிறார்கள். அவர் 10 இடங்களில் பேசுவார் என்றும் சொல்கிறார்கள்.

குறிப்பாக அகிலேஷ் யாதவ் போட்டியிடும் தொகுதியிலும், வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்தும் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் எதிர்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, இப்போதைக்கு அமைச்சரவை மாறாது.

TN Lok Sabha Election 2024 MK Stalin is campaigning against Modi in Varanasi

அடுத்து ஜூன் 3 ஆம் தேதி திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா வருகிறது. அதற்காக வேலைகளிலும் திமுக அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இதனிடையே திமுக அமைச்சர்கள் சிலரின் வழக்குகள் வேகம் பெற்றுள்ளன. அதுவும் திமுகவுக்கு தலைவலியாக மாறும். துரைமுருகன் கைது செய்யப்படுவாரா என்று தெரியாது.

ஆனால், அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டாலே எதிர்க்கட்சியினர் தாண்டவமாடி விடுவார்கள். ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கி விடுவார்கள்" என்கிறார்

TN Lok Sabha Election 2024 MK Stalin is campaigning against Modi in Varanasi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+