கர்நாடகாவுக்கு லாரிகள் செல்வது நிறுத்தம்... லாரி உரி்மையாளர் சம்மேளனம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கும், கர்நாடகா வழியாக பிற மாநிலங்களுக்கும் ஒரு லாரியும் செல்லாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் வன்முறை மூண்டிருப்பதால் லாரிகளை அனுப்ப வேண்டாம் என்று சம்மேளனத் தலைவர் குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்த உத்தரவு காரணமாக தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட 40,000 லாரிகள் கர்நாடகத்திற்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN lorries will not ply to Karnataka

இன்று பெங்களூரில் நடந்த மிகப் பெரிய வன்முறையில் தமிழகத்தைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட லாரிகளை வன்முறையாளர்கள் தீவைத்துக் கொளுத்தினர் என்பது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து சம்மேளனத் தலைவர் குமாரசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறு அறிவிப்பு வரும் வரை தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு லாரிகள் இயங்காது. வடமாநிலங்களுக்கு கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளையும் இயக்க வேணடாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக கலவரம் காரணமாக தமிழக லாரிகள் ஓடாததால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நடக்கும் வன்முறை காரணமாக 40 ஆயிரம் லாரிகள் ஓடாது. சுமுக தீர்வு ஏற்படும் வரை தமிழகத்தில் இருந்து லாரிகளை இயக்க வேண்டாம் எனவும் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+