எங்களைப் பார்த்ததும் நடிக்காதீங்க- ரேஷன் கடை ஊழியர்களை எச்சரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்
செஞ்சி: ஆய்வுக்காக சென்ற தங்களைப் பார்த்துவிட்டு வேலை செய்வதாக நடிக்காதீர்கள் என்று ரேஷன் கடை ஊழியர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டையில் அப்பகுதியில் நந்தன் கால்வாய் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள அவ்வழியாக சென்று கொண்டிருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், திடீரென்று நியாய விலை கடைக்குள் உள்ளே சென்றார். அங்குஅரிசி, சர்க்கரை வழங்கும் எடைத்தட்டை ஆய்வு மேற்கொண்டு, முறையாக பராமரிக்காத எடைத்தட்டை மாற்ற வேண்டும் என கூறினார்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சக்கரை, எடைத்தட்டு இப்படித்தான் இருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், அமைச்சருக்காக நீங்கள் சும்மா நடிக்க வேண்டாம் என விற்பனையாளிடம் எச்சரித்தார். பராமரிக்காத எடைத்தட்டை உடனடியாக அகற்றி, புதிய எடைத்தட்டை மாற்ற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

திட்டப்பணிகளை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர், திடீரென்று நியாய விலை கடைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, அங்கிருந்த ஊழியர்களையும் எச்சரித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications