தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழ்த்தாய்க்கு அவமரியாதை செய்த விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.
சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த விஜயேந்திரர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரவேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோருடன் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திர சுவாமிகள் கலந்து கொண்டார்.

இதுகுறித்து தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் எழுந்திருக்காதது தவறு தான். அப்போது அவர் தியானத்தில் இருந்ததாக கூறுகிறார்கள். எந்த நிலையில் இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது அவர் எழுந்திருக்க வேண்டும். ஏன் எழுந்திருக்கவில்லை என அவர் தான் விளக்க வேண்டும் என்றும், இதற்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே விஜயேந்திரர் செய்தது தவறு தான் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், விஜயேந்திரர் செய்ததில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூவும் இருவேறு விதமான கருத்துகளை கூறி இருக்கும் நிலையில் கடம்பூர் ராஜூ கண்டனம் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications