தாய் தந்தை இல்லாத அநாதையாகிவிட்டதே அதிமுக... கலங்கும் 'தெர்மகோல்' ராஜூ
தாய், தந்தை இல்லாத கட்சியாக இருக்கும் நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக கட்சி அநாதையாகிவிட்டது; அதிமுகவின் இரு கோஷ்டிகளும் விரைவில் இணையும் என அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செல்லூர் ராஜூ கூறியதாவது:
எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவின் வழிகாட்டுதலால் சிறப்பாக செயல்பட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தாய் தந்தையை இழந்து தவிப்பது போல தனித்துவிடப்பட்டுள்ளோம்.

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிமுக ஒன்றாக செயல்படும்.
கூட்டுறவு வங்கிகள் தனியார் வங்கிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன. ரூ 7 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.












Click it and Unblock the Notifications