அதிகாலை 2.25 மணி.. லியோ நெருப்பை பற்ற வைத்த உதயநிதி ஸ்டாலின் ட்வீட்- ஃபயர் விட்ட 'தளபதி' ரசிகர்கள்
சென்னை: நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் சூப்பர் என திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாலை 2.25 மணிக்கு எக்ஸ் பக்கத்தில் போட்ட பதிவை விஜய் ரசிகர்கள் பயர் விட்டு கொண்டாடித் தீர்க்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. லியோ திரைப்படத்தின் ஆடியோ - இசை வெளியீட்டு விழா தொடங்கி அதிகாலை காட்சி வெளியிடுவதை வரை பெரும் சிக்கல்கள்.

லியோ இசைவெளியீட்டு விழா சமயத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் அசம்பாவித புகார்கள் எழுந்தன. இதனையடுத்து நேரு விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.
பின்னர் லியோ சிறப்பு காட்சிகளுக்காக நீதிமன்றம் போக வேண்டியதானது. நீதிமன்றமோ தமிழ்நாடு அரசை சந்தித்து பேச சொன்னது. தமிழ்நாடு உள்துறை செயலாளரை லியோ படக்குழு சந்தித்து பேசியது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் லியோ வழக்கறிஞர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி அங்கேயும் சர்ச்சையானது.

லியோ பட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசை விமர்சித்திருந்தார். ரெட் ஜெயன்ட் மூவீஸையும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2.25 மணிக்கு திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் லியோ படத்தை பாராட்டி ஒரு பதிவிட்டுள்ளார்.
அப்பதிவின் விவரம் அப்படியே: Thalabathy @actorvijay Anna's #Leo 👍🏽👍🏽 👍🏽
@Dir_Lokesh excellent filmmaking , @anirudhofficial music , @anbariv
master @7screenstudio 👏👏👏 #LCU 😉! All the best team !
இவ்வளவுதான்.. லியோ படத்தின் முதல் விமர்சனமும் இதுதான். அப்புறம் என்ன விஜய் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக குவிந்து பயரோ பயராக விட்டுக் கொண்டிருக்கின்றனர். 23 நிமிடங்களில் சுமார் 75 ஆயிரம் பேர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்டை பார்த்திருக்கின்றனர் எனில் 'தீ' எப்படி பரவி இருக்கிறது!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications