For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகி புயல் பாதிப்பு.. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழக அரசு அறிக்கை சமர்பிப்பு

ஓகி பாதிப்பு பற்றி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழக அரசு அறிக்கை சமர்பித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஓகி பாதிப்பு பற்றி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழக அரசு அறிக்கை சமர்பித்து இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஓகி புயல் பாதிப்பிற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்த நிலையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகம் மற்றும் கேரளாவை சில வாரங்களுக்கு முன்பு ஓகி புயல் தாக்கியது. சில நாட்களுக்கு இந்த புயலின் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி பார்வையிட்டார்.

TN ministers summits details about damages by Ockhi to Rajnath Singh

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவிற்கு முதற்கட்டமாக ரூ.325 கோடி நிதி உதவி வழக்கப்படவுள்ளது. இதில் தமிழகத்திற்கு 280 கோடி வழங்கப்படும்.

இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் ஓகி புயல் சேதம் பற்றிய அறிக்கையை ராஜ்நாத் சிங்கிடம் அளித்தனர். இதில் விவசாய நிலங்கள், மின் கட்டமைப்பு , மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அறிக்கையாக அளித்துள்ளனர்.

இது இரண்டாம் கட்ட நிவாரண உதவிகளை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் முதற்கட்ட நிவாரண நிதியை உயர்த்தி கேட்கவும் இந்த அறிக்கை உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

English summary
TN ministers summits details about damages by Ockhi to Home Minister Rajnath Singh. Few days ago PM Modi announced relief fund for cyclone Ockhi. He announced 325 crore fund for Tamilnadu, Kerala, Lakshadweep. 1400 houses will be revamped in all places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X