69வது சுதந்திர தினம் - தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில் கோலாகல கொண்டாட்டம்!
சென்னை: நாட்டின் 69வது சுதந்திர தினக் கொண்டாடத்தினை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும் அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் மாநில தலைமை அலுவலத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியேற்றி கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியினர் தேசிய கொடியேற்றி கொண்டாடினர். கட்சியினர் இனிப்புகளை வழங்கி, சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தேசிய கொடியை ஏற்றி கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேசியக் கொடியை ஏற்றி, கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கி, கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தேமுதிக தலைமை கழகத்தில் தேசியகொடியேற்றி மாணவர்களுக்கும், தாய்மார்களுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தன்னுடைய சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து, தொண்டர்களுக்கும், பொதுமக்களும் இனிப்புகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications