சென்னையில் செப். 26 தமிழர் எழுச்சிப் பேரணி- 150 தமிழ் அமைப்புகள் பங்கேற்பு: தி.வேல்முருகன்!
மதுரை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உரையாற்ற அனுமதித்ததைக் கண்டித்து சென்னையில் செப்டம்பர் 26-ல் நடைபெறும் தமிழர் எழுச்சிப் பேரணியில் 150 அமைப்புகள் பங்கேற்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:

சென்னையில் கடந்த 6-ந் தேதி அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் என 150 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் இலங்கை இனப்படுகொலை குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு அனுமதி மறுக்கும் மகிந்த ராஜபக்சேவை ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்ற அனுமதித்ததையும் அதைத் தடுக்காத மத்திய அரசையும் கண்டித்தும் சென்னையில் செப்டம்பர் 26-ந் தேதி மாபெரும் தமிழர் எழுச்சிப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெறும் இந்தப் பேரணியில் 150 அமைப்புகள் பங்கேற்கின்றன.
இவ்வாறு தி.வேல்முருகன் கூறினார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications