அந்த கட்சி 2 கோடி கேட்டுச்சுன்னு இங்க வந்தா, இவங்க "3" கேட்கிறாங்களே... புலம்பும் மா.செ.!
எம்.எல்.ஏக்களை வளைக்க பணம் ரெடி செய்ய தலைமை சொன்னதால் புலம்புகிறாராம் தென்புல மாவட்ட செயலாளர்.
சென்னை: நான் இருந்த கட்சி இரண்டு கோடி கேட்டுச்சு... வேண்டாம்னு இங்க வந்தா.. இப்ப மூணு கோடி கேட்கிறாங்களே என புலம்பி தள்ளியிருக்கிறார் தென்மாவட்ட மாவட்ட செயலாளர் ஒருவர்.
தென்மாவட்ட எம்.எல்.ஏ பிளஸ் மாவட்ட செயலாளர் ஒருவருக்கு, தலைமையிடம் இருந்து அவசர அழைப்பு. கடந்த புதன்கிழமை காலை, தலைமைக் கழகம் வந்தவரை அமர வைத்துப் பேசினார் கட்சியின் தலைமை நிர்வாகி.

எம்.எல்.ஏக்களை வளைக்க வேண்டியுள்ளது. மூனு கோடி கொண்டு வாருங்கள். இதைப் பற்றி வேறு யாரிடமும் பேசிக் கொள்ள வேண்டாம்" என்றதோடு ஊருக்கு அனுப்பி வைத்தார். இந்த ஒற்றை வரியை உள் வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பிய எம்.எல்.ஏ தம்முடைய ஆதரவாளர்களிடம் புலம்பித் தீர்த்துவிட்டாராம்.
அந்தக் கட்சியில இரண்டு கோடி கேட்டாங்கன்னுதான் இந்தக் கட்சிக்கு வந்தேன். இங்க மூனு கோடி கேக்கறாங்க. இன்னும் கூடுதலா இரண்டு கோடி கேப்பாங்க போலிருக்கு. எந்தத் தொழிலதிபர் இப்ப நாம இருக்கற நிலைக்கு பணம் தரப் போறான்' என ஆதங்கப்பட்டிருக்கிறார்.
கட்சித் தலைமைக்கு வாரிக் கொடுத்தா நமக்கு நல்லது தானே!' என ஆதரவாளர் ஒருவர் எதிர்க் கேள்வி கேட்க, ஏன் கட்சித் தலைமையோட கஜானா நிரம்பித்தானே இருக்கு. எம்.எல்.ஏக்களை வளைக்க பணமா இல்லை? எனக் கொந்தளித்தவர், ஒவ்வொரு தொழிலதிபராக போன் செய்து வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்துக்குள் பணம் வேண்டும் என இலக்கும் நிர்ணயித்திருக்கிறதாம் தலைமை.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications