சேகர் ரெட்டி விவகாரத்தில் ரொம்பவே பதறிய தென் தமிழக தலைவர்
சேகர் ரெட்டி விவகாரத்தில் ரொம்பவே பதறிய தென் தமிழக தலைவர் பற்றிய செய்தி இது,
சென்னை: சேகர் ரெட்டியிடம் பணம் பெற்றவர்கள் பட்டியல் வெளியான போது தென் தமிழகத்தின் தலைவர் ஒருவர் ரொம்பவே பதறிப் போய்விட்டாராம்.
சேகர் ரெட்டி மீது வருமான வரித்துறை கை வைத்த போது அதிமுக தலைவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடிவயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருந்தார்களாம். தென் தமிழகத்தைச் சேர்ந்த அந்த தலைவரும் விதிவிலக்கு அல்லவாம்.

பின்னர் வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் என சேகர் ரெட்டியின் டைரி ஒன்று ரிலீஸ் செய்யப்பட்டது. அதில் பெரிய, சிறிய கட்சி தலைவர்களுக்கு மாதந்தோறும் கப்பம் போய்க் கொண்டிருந்த விவரம் இடம்பெற்றிருந்தது.
அப்பட்டியல் வெளியான போது ரொம்பவே பதறிய தென் தமிழகத் தலைவர் ஒருவர், சேகர் ரெட்டியின் பிஏவுக்கு போனடித்திருக்கிறார். என்னய்யா ஒரு ஆவணத்தைக் கூட பாதுகாப்பாக வைக்க முடியாதா? எங்க கணக்கு எல்லாம் வந்துவிடுமா? என உறுமலும் செருமலுமாக பதறியிருக்கிறார்.
சேகர் ரெட்டி தரப்போ, சார் உங்க கணக்கு எல்லாம் செளத் அக்கவுண்ட்... அதையெல்லாம் நாங்க கிளியர் செய்துவிட்டோம்... கவலைப்படாதீங்க என கூறியுள்ளார். அப்போதுதான் அந்த முகத்தில் களையே வந்ததாம்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications