முற்றும் காவிரி விவகாரம்... டெல்லியில் நாளை மத்திய நீர்வள அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் சந்திப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட 3 நாட்களே உள்ள நிலையில் டெல்லியில் நாளை நீர்வளத்துறை அதிகாரிகளை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சந்தித்து பேசுகின்றனர்.
Recommended Video

சென்னை : உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், டெல்லியில் நாளை நீர்வளத்துறை அதிகாரிகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு தலைமை பொறியாளர் சந்திக்கின்றனர்.
காவிரி நீரை பங்கிட்டு கொள்வது குறித்து உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி இறுதித்தீர்ப்பை அளித்தது. தமிழகத்திற்கு அளிக்கப்பட்டு வந்த நீரின் அளவு குறைக்கப்பட்டாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறி இருந்ததால், ஒதுக்கப்பட்ட தண்ணீராவது மேலாண்மை வாரிய கண்காணிப்பில் சரியாக கிடைத்தால் போதும் என்று தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் நிம்மதியடைந்தனர்.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது, ஒரு திட்டம் தான் அதாவது காவிரி மேற்பார்வைக் குழு தான் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கைவிரித்துவிட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்று சுட்டிக்காட்டப்படவில்லை, திட்டம் என்று மட்டுமே உள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு காவிரி நீரால் பயன்பெறும் 4 மாநிலங்கள் ஒப்புகொண்டதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கம் மார்ச் 29ம் தேதி கடைசி நாள் என்பதால் வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் டெல்லயில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி விவகாரத்தில் அரசுக்கும் நெருக்கடி இருக்கும் நிலையில், டெல்லியில் நாளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் சந்திக்க உள்ளனர். நீர்வளத்துறை அதிகாரிகளை தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சந்திப்பதற்காக டெல்லி விரைந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications