விடிய விடிய கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை- தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: விடிய விடிய கொட்டிய கனமழை காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநிலக்கல்லூரி, அண்ணாபல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 20 நாட்கள் மழை கொட்டியது. பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது மழை வெள்ளம். நான்கு நாட்கள் நன்றாக வெயிலடித்த நிலையில் இடைவெளி விட்டு தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் ,அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல மழை தொடங்கியுள்ளது.

விட்டு விட்டு மழை
சென்னை நகரில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை
இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு
கடந்த முறை பெய்த மழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் இன்றும் நாளையும் நடைபெற இருந்தன. இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று துணை வேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தாண்டவன் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைத் தேர்வுகள்
மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அதேபோல் சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த தேர்வு வரும் 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்

அலுவலகம் செல்வோர் தவிப்பு
அதிகாலையில் இருந்து கனமழை கொட்டி வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் அலுவலகத்தில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் தேங்கியுள்ள வெள்ளநீரினால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications