ஆள் மாறாட்டத்தை இப்படித்தான் தடுக்கப் போகிறோம்.. விளக்குகிறார் நெல்லை சார்பதிவாளர்
நெல்லை: பத்திரப்பதிவின்போது ஆள் மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் இனிமேல் பத்திரப்பதிவின்போது ஆள் மாறாட்டம் செய்வது உள்ளிட்ட மோசடிகள் முற்றிலும் தவிர்க்கப்படும், தடுக்கப்படும்.
இந்த ஆள் மாறாட்டட, போலி ஆவண தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நெல்லை பாளையங்கோட்டை இணை சார்பதிவாளர் ரவிசங்கர் கூறியுள்ளதாவது...

9 மண்டல பத்திரப்பதிவு அலுவலகங்கள்
தமிழகத்தில் சென்னையை தலைமை இடமாக கொண்டு 9 மண்டல பத்திர பதிவு அலுவலகங்கள் உதவி பதிவு துறை தலைவர் தலைமையில் இயங்கி வருகின்றன. இவற்றின் கீழ் 50 மாவட்ட பதிவாளர் அலுவலங்களும், 578 சார் பதிவாளர் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

அந்தக் காலத்தில் கைநாட்டும், கையெழுத்தும் மட்டுமே
ஒரு காலத்தில் பத்திரப்பதிவின் போது கைரேகை, கையொப்பம் மட்டுமே பெறப்பட்டு வந்தன. இதன் மூலம் முறைகேடுகள் அதிகம் நடந்ததால் போட்டோ ஓட்டும் முறை அமுலுக்கு வந்தது.

புகைப்படம் ஒட்டுவதிலும் போர்ஜரி
இதிலும் சில சமயம் ஆள்மாறாட்டம் மூலம் போலியாக ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதை தவி்ர்க்கும் வகையில் வெப் கேமரா உதவியுடன் பத்திர பதிவு அலுவலகங்களிலேயே படமெடுக்கும் முறையும், மின்னனு ரேகை பதிவு்ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இனிமேல் வெப் காமரா படம் பிடிக்கும்
இதற்காக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வெப் கேமரா மற்றும் மின்னனு ரேகை பதிவு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. நவம்பர் 1 முதல் அவை சோதனை முறையாக அமுலுக்கு வந்துள்ளன.

ரேகையுடன், புகைப்படமும்
இதன்படி பத்திரம் பதிவு செய்ய வருவபர் மற்றும் சொத்து வாங்குபவரின் புகைப்படமும், விரல் ரேகையும் அந்த பத்திரத்துடன் இணைத்து வழங்கப்படும். இந்த முறை தமிழகம் முழுவதும் நவம்பர் 18ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.

மை ரேகை நவ. 17ம் தேதியுடன் கடைசி
ஆள் மாறாட்டம், போலி பத்திர பதிவுகளை தடுக்கும் வகையில் இந்த திட்டம் தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் நடைமுறையில் உள்ள போட்டோ ஓட்டும் முறை, மை மூலம் ரேகை வைக்கும் முறை ஆகியவை நவம்பர் 17ம் தேதியுடன கைவிடப்படும். நவம்பர் 18ம் தேதி முதல் புதிய நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படுகிறது.

ரேகைப் பதிவு பாதுகாக்கப்படும்
இந்த புகைப்படம், மின்னனு ரேகை பதிவு மற்றும் பதிவுக்குறிய நம்பர் போன்றவை பாதுகாப்பாக வைக்கப்படும். பின்னர் சொத்தை விற்கும்போது அந்த ஆவண நம்பருடன் ஓப்பிட்டு புகைப்படம் மற்றும் மின்னனு ரேகை ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே மீண்டும் அந்த சொத்தை விற்க முடியும்.

இனிமேல் தில்லுமுல்லுக்கு இடமில்லை
இதனால் இனிமேல் தில்லுமுல்லு பண்ண வழியே இல்லை என்று ரவிசங்கர் தெரிவி்த்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications