தமிழகம் வந்தார் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்- நாளை பதவியேற்பு!
தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பதவியேற்கிறார்.
சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை வருகை தந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தமிழக கவர்னராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.

அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி தமிழக பொறுப்பு கவர்னர் என்ற கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இதற்கிடையே அமைச்சர்கள் மீதான
ஊழல் புகார், குட்கா பிரச்சினை, சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்துக்கு முழு நேர கவர்னரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இதைத்தொடர்ந்து அசாம் மாநில கவர்னராக பணி யாற்றிய பன்வாரிலால் புரோஹித்தை தமிழகத்தின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த 30-ஆம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நாளை (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்றுக் கொள்கிறார்.
இதற்காக அவர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 9.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு பன்வாரிலால் புரோகித்துக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
-
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications