வாலிபால் விளையாட இலங்கை சென்ற தமிழக வீரர்கள்: பயிற்சியாளர் உட்பட இருவர் 'சஸ்பென்ட்'

ஆசிய இளையோர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்க இந்திய அணி இலங்கை சென்றது. இதில் இடம் பெற்றிருந்ததால் தமிழக வீரர்கள் இருவரும் இலங்கை சென்றனர்.
சென்னை லயோலா கல்லுாரியில் படிக்கும் இருவரும் நேரு விளையாட்டரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கியிருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குஜராத், ராஜஸ்தான் ஆகிய பயிற்சி முகாம்களில் பங்கேற்றனர். அப்போது, இவர்கள் திறமையை பார்த்த இந்திய வாலிபால் பேரமைப்பு, இலங்கையில் நடக்கும் இளையோர் வாலிபால் போட்டிக்கு தேர்வு செய்தது.
இதையடுத்தே, அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில், இங்கிருந்து வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம், தமிழக அரசுக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, வாலிபால் பயிற்சியாளர், விடுதி மேலாளர் ஆகிய இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். மேலும் நேரு விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு வாலிபால் சங்க அலுவலக்த்துக்கும் சீல் வைக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் இருந்த பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனிடையே இலங்கை சென்ற, அந்த இரண்டு மாணவர்களும் நேற்று சென்னை திரும்பினர். இவர்கள் இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, உறுப்பினர் செயலரை சந்தித்து, தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications