முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வேலையை துவங்கிய தமிழக அரசு
தேனி: உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வேலையை தமிழக அரசு இன்று துவங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்தலாம் என்று கூறி கடந்த 7ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து பொதுப்பணித் துறை பணிமனை ஆய்வாளர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு சென்னையில் இருந்து முல்லைப் பெரியாறு அணை இருக்கும் பகுதிக்கு சென்றது.

அந்த குழு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து திங்கட்கிழமை ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் வெளியேறும் 13 ஷட்டர்களை மனித ஆற்றலால் இயக்குவது, மேலும் மோட்டார்களால் இயக்குவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஷட்டர்களுக்கு கிரீஸ் போட்டு அதை மேலும், கீழும் இறக்கிப் பார்த்தனர். இந்த ஷட்டர் சீரமைப்பு பணி முடிய ஒரு வாரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது ஆபத்து என்று கேரளா தொடர்ந்து கூறி வந்த நிலையில் அணை வலுவாக உள்ளது அதனால் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications