என்ன 'டிரஸ்' போட வேண்டும் என்பதை கிளப்புகள் தீர்மானிக்க முடியாது - ஞானதேசிகன்
சென்னை: உடை என்பது மனித நாகரீகத்தின் ஓர் அடையாளம். அது எந்த உடையாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற உரிமையை, சென்னை கிரிக்கெட் கிளப் நிர்வாகம் வைத்துக் கொள்ள முடியாது. இந்த நிகழ்ச்சி பலமுறை நடந்திருக்கிறது. இது இனிமேல் தொடர அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்துகின்றேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

சென்னையில் உள்ள ஒரு கிளப்பில் உயர்நீதிமன்ற நீதிபதியும், மூத்த வழக்கறிஞர்களும் வேட்டி கட்டி ஒரு தனியார் நிகழ்ச்சிக்குப் போகிறபோது, உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி வேதனைக்குரியது.
யார் வேட்டி கட்டிப் போனார்கள் என்பது முக்கியமல்ல. ஆனால், தமிழகத்தில் நடக்கின்ற ஒரு கிளப்பில் வேட்டி கட்டி உள்ளே வரக்கூடாது என்ற விதியை ஏற்க முடியாது.
ஒரு கிளப்பில் உறுப்பினர்கள் ஆனபிறகு, அந்த கிளப் சட்டதிட்டம் அந்த உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும். ஆனால், அந்த கிளப்பில் உறுப்பினர்கள் அல்லாதவர்களை இந்த விதி கட்டுப்படுத்தாது. அதைவிட இந்த கிளப்புகள் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு, விதிகளை இதற்கென்று உள்ள அதிகாரியிடம் பதிவு செய்து நடப்பவை.
இந்த விதிகளை சங்கங்கள் பதிவு சட்டம் என்ற சட்டத்தின் அடிப்படையில் அந்த அதிகாரி வேட்டி கட்டி உள்ளே வரக்கூடாது என்ற விதி இருந்தால் அந்த விதியை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடை என்பது மனித நாகரீகத்தின் ஓர் அடையாளம். அது எந்த உடையாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற உரிமையை, கிளப் நிர்வாகம் வைத்துக் கொள்ள முடியாது. இந்த நிகழ்ச்சி பலமுறை நடந்திருக்கிறது. இது இனிமேல் தொடர அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்துகின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications