கட்சிக்குள் குழப்பம் செய்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன் - திருநாவுக்கரசர் பரபரப்பு புகார்
நான் அதிமுக ஆதரவாக செயல்படுவதாக வந்த செய்திகள் தவறு என்றும், ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி திருநாவுக்கரசர் கூறியு
சென்னை: சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை தாக்கியது கடும் கண்டனத்திற்கு உரியது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி திருநாவுக்கரசர் கூறியுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவிற்கு ஆதரவாக திருநாவுக்கரசர் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சிக்குள் இளங்கோவன் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கவே கட்சித்தலைமை உத்தரவு அளித்து இருந்தது என்று கூறினார். என் மூலமாகத்தான் இதை அறிவிக்கவும் கட்சித் தலைமை உத்தரவிட்டது, ராகுல் காந்தியோ, முகுல் வாஸ்னிக்கோ இதை அறிவிக்கவில்லை என்றார்.

கட்சிக்குள் பூசல்
நான் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக இருப்பது போல கூறுவது வடி கட்டிய பொய் என்றும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நான் ஆதரவு தெரிவித்ததாக வந்த தகவல் உண்மை இல்லை என்று கூறிய அவர் காங்கிரஸில் உட்பூசல் ஏற்படுத்தவே பொய் தகவல் பரப்பப்பட்டது என்றார்.
தகவல் சொல்பவர்களின் பெயர்களைச் சொல்லி போடுங்கள் என்று கூறிய அவர், ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறும் எந்தக் கருத்துக்கும் நான் பேச விரும்பவில்லை என்றார் திருநாவுக்கரசர்.

ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு கண்டனம்
சபாநாயகர் நாற்காலியில் திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்தது தவறு. அதேபோல சட்டசபையில் ஸ்டாலினைத் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்த திருநாவுக்கரசர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

வெளிநடப்பு
எங்களின் நிலையை அறிவிக்க நாங்கள் கால தாமதம் செய்யவில்லை என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்த்து வாக்களிக்கச் சென்றனர். திமுகவினரை வெளியேற்றவே எங்கள் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து விட்டனர் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications