டி.என்.பி.எஸ்.சிக்கு ராஜாராம் ஐ.ஏ.எஸ். உள்பட 11 உறுப்பினர்கள் நியமனம்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு(டி.என்.பி.எஸ்.சி.) 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தேர்வாணையத்தில் 10 உறுப்பினர்களின் இடம் காலியாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவரும், உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் நேற்று ஓய்வு பெற்றார்.

இதையடுத்து செல்வமணி, குப்புசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். இந்நிலையில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு ஆளுநர் ரோசய்யா உத்தரவிட்டார்.
அதன்படி தேர்வாணையத்திற்கு 11 உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை கவர்னர் நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்படும் உறுப்பினர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள்.
ஆர்.பிரதாப் குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுசாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணியமூர்த்தி, மு.ராஜாராம் ஐ.ஏ.எஸ். (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்) என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 பேரும் வரும் புதன்கிழமை முறைப்படி பதவியேற்றுக் கொள்வார்கள்.












Click it and Unblock the Notifications