குரூப் 2 பணியிடங்கள் 2846… தேர்வு எழுதியதோ 6 லட்சம் பேர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு நடந்தது.
தமிழ், பொது அறிவு என இரு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர். ஆனால் பணியிடங்களின் எண்ணிக்கை 2846 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் தேர்வை எழுதினர். இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் சில மையங்களில் மின்சார விநியோகம் சரியில்லை என்றும் சரியான மின்விசிறி வசதி செய்து தரப்படவில்லை என்றும் தேர்வு எழுதியோர் புலம்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications