டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி.. இணையதளம் முடக்கம்! விண்ணப்பதாரர்கள் தவிப்பு
சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 8-ந் தேதி கடைசி நாள் என்பதால் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பிக்க குவிந்ததால் இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் விண்ணப்பிக்க முடியாமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பதவிகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி ஆள் எடுத்து வருகிறது
தற்சமயம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை (8-ம் தேதி) கடைசி நாள் ஆகும். 8-ம் தேதி நள்ளிரவு (11.59 மணி) வரை ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் நெட் பேங்கிங், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம் என தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக விண்ணப்பிக்க காலம் இருந்த போதிலும் கடைசி நாட்களில் விண்ணப்பிக்க காத்திருந்த இளைஞர்கள் கடந்த 2 நாட்களாக இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். நாளை கடைசி நாள் என்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்ய முயற்சி செய்வதால் சம்மந்தப்பட்ட இணைய தளத்தில் தடை ஏற்பட்டு சரிவர இயங்கவில்லை.
இதனால் கடந்த 2 நாட்களாக இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாததால் தவிக்கின்றனர். அதனால் மாற்று இணையதள முகவரி கொடுத்தாலோ அல்லது விண்ணப்பம் செய்ய கால நீடிப்பு செய்தாலோ விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் விண்ணப்பம் செய்ய வசதியாக இருக்கும் என்று கூறுகின்றனர். இதனால் பல ஆயிரம் ஏழைபட்டதாரிகள் போட்டி தேர்வுகளில் பங்கு பெற முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications