மீடியா வெளிச்சத்தில் இருந்தும் தப்பிக்க விஜயபாஸ்கரின் மனைவி செய்த கில்லாடி வேலை!
மீடியாக்களின் கண்களில் சிக்காமல் இருப்பதற்காக அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி அதிகாலையிலேயே வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
சென்னை : வருமான வரித்துறை அதிகாரிகள் அனுப்பிய சம்மனை ஏற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா அதிகாரிகள் வருவதற்கு முன்னர்அதிகாலையிலேயே வருமானவரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததில் தொடர்பு இருந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் புதுக்கோட்டையில் உள்ள குவாரிகள் கடந்த ஏப்ரல் 7ந்தேதி வருமான வரி சோதனைக்கு ஆளனாது. இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. இதுதொடர்பாக வருமான வரி அதிகாரிகள் விஜயபாஸ்கரிக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரணையும் நடத்தினர்.

இந்நிலையில் விஜயபாஸ்கரின் பெரும்பாலான நிறுவனங்களில் அவரது மனைவி ரம்யாவிற்கும் பங்கு இருப்பதால் அவரையிம் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. ஏப்ரல் 3ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட நிலையில் மாலையில் ஆஜராவதாக தெரிவித்தார். ஆனால் 4 மணி, 5 மணி இரவு 9 மணி என மாறி மாறி டைம் கேட்ட ரம்யா இறுதி வரை ஆஜராகவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே அமைச்சரின மனைவி ரம்யா அடையாளம் தெரியாத கார் ஒன்றில் ஏறி வருமானவரித்துறை அலுவலகத்தில் போய் அமர்ந்து விட்டாராம். மீடியாக்களுக்கு பயந்தே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அமைச்சரின் மனைவி விசாரணைக்கு ஆஜரானாலும் அதிகாரிகள் 10 மணிக்கே வருவார்கள் என்பதால் ஏறத்தாழ 5 மணி நேரத்திற்கும் மேலாக பதட்டத்தடனே அமர்ந்திருக்கிறாராம் ரம்யா.
அமைச்சரின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதையும், அதில் உள்ள உண்மைகளையும் மீடியாக்கள் பிரிச்சு மேய்ந்தத போல தாமும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே ரம்யா அதிகாலையிலேயே சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமன வரி அலுவலகம்சென்றாராம். தற்போது வருமான வரி அலுவலகத்தில் 40க்கும் மேற்பட்ட கேமராக்கள் அவரை படம்பிடிக்க காத்திருக்கின்றன, எப்படி தப்பிப்பார் ரம்யா கேமரா லென்சுகளிடம் இருந்து என்பது விசாரணை முடிவிலேயே தெரிய வரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications