ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கமல் ஆதரவு இவர்களுக்கா? உச்சகட்ட எதிர்பார்ப்பு
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகரில் நடிகர் கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு என்பது ரசிகர்கள் கேள்வியாக உள்ளது.
பாரதியார் போல முண்டாசு கட்டிக்கொண்டு டிவிட்டரில் டி.பி. வைத்தபடி அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார் கமல்ஹாசன். இதை சீரியசாக எடுத்து, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழிசை போன்ற கட்சி தலைவர்கள் கருத்து கூறியபடி உள்ளனர்.
இப்படி ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ள கமல் ஆர்.கே.நகரில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்?

தனிக்கட்சி அறிவிப்பு
தனிக்கட்சி துவங்கப்போகிறேன் என்று அறிவித்துள்ளார் கமல். எனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அவரது கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக உள்ளார் கமல். முதல்வர் பிரனாயி விஜயனை அவ்வப்போது சந்தித்து பேசியுள்ளார்.

அந்த கட்சிகள் போட்டியில்லை
எனவே ஆர்.கே.நகரில் மார்க்சிஸ்ட் போட்டியிட்டால் அதற்கு கமல் ஆதரவு அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி மற்றும், திரினாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் கமல் நட்பு பாராட்டினாலும், அவ்விரு கட்சிகளும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது சந்தேகம். எனவே கமல் சாய்ஸ் கம்யூனிஸ்ட்டுகளாக இருக்கலாம்.

திமுகவுக்கு ஆதரவு?
அதேநேரம் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதையும் கமல் விரும்பமாட்டார் என தெரிகிறது. தன் மீதான அதிமுகவினரின் விமர்சனங்களை உண்மை என்பதை போல அது காட்டிவிடும் என்ற அச்சம் கமலுக்கு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் அதிமுகவை வீழ்த்த ஓரளவுக்கு கமலின் மறைமுக ஆதரவு தங்களுக்கு இருக்கவே செய்யும் என்பது திமுகவினர் எதிர்பார்ப்பு.

வாய்ஸ் கொடுத்து புண்ணாக்க வேண்டாம்
இதுகுறித்து கமலுக்கு நெருக்கமான சிலரிடம் கேட்டபோது, "அநேகமாக இந்த தேர்தலில் கமல் வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்றே தெரிகிறது. ஏனெனில், தமிழகத்தில் இடைத் தேர்தல் எப்படி நடைபெறும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆளும் கட்சிதான் பெரும்பாலும் வெற்றி பெறும். அதிசயங்கள் நிகழ்ந்தால்தான் வேறு கட்சி வெல்ல முடியும். எனவே கமல் பேசாமல் இருப்பதையே விரும்புவார்" என்கிறார்கள்.

டிவிட்டுகளை பார்க்கலாம்
இருப்பினும், ஆர்.கே.நகர் தேர்தல் முடியும் வரை, அங்கே பணம் கொடுக்கிறார்கள், இங்கே மோதிரம் கொடுக்கிறார்கள் என்பது போன்ற பல டிவிட்டுகளை கமலிடமிருந்து எதிர்பார்க்கலாம். அதிமுகவுக்கு எதிராக இன்னும் அதிக உக்கிரமாக இருப்பார் என்பதே ரசிகர்கள் கருத்தாக உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications