+2 முடித்த மாணவர்களுக்கு.. அரசின் மிக முக்கிய அறிவிப்பு.. இன்றுதான் கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டன. இதில் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த தேர்வில் மாணவ, மாணவியர் எடுத்த அதிக மதிப்பெண் உட்பட பல முக்கிய விவரங்கள் வெளியாகி வருகின்றன.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகிதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 91.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் எப்போதும் சதம் அடிப்பது மிக மிக கடினம். ஆனால் கடந்த சில வருடங்களாக சதம் அடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் சதம் அடிப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. வெறும் 2 பேர் மட்டுமே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் சதம் அடித்துள்ளனர்.
சேர்க்கை தொடக்கம்: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை நடந்து வரும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் ஏற்கனவே அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கிவிட்டது.
அதேபோல் கல்லூரிகளிலும் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
என்ன செய்யலாம்?:இந்த நிலையில்தான் 12ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
அதன்படி கடந்த 8ம் தேதியில் இருந்து 3 வாரமாக கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
19ம் தேதி இந்த விண்ணப்பம் நிறைவு அடைவதாக இருந்தது. ஆனால் மாணவர்கள் நலன் கருதி மேலும் 3 நாட்கள் இந்த விண்ணப்பங்கள் நீட்டிக்கப்பட்டது. இன்றோடு இதன் அவகாசம் முடிவடைகிறது.
164 கல்லூரிகளில் சேர்வதற்கு இரண்டரை லட்சம் மாணவ-மாணவியர் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனர். இன்றோடு ஆன்லைன் விண்ணப்ப முறைகள் நிறைவு பெறுகின்றன.
tngasa.in என்ற தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுவரை 2.37 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இனி ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய விரும்பினால் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆலோசனை:இதில் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவியர் பலரும் அடுத்து என்ன செய்யலாம், எந்த கல்லூரியில் சேரலாம் என்று ஆலோசனை செய்ய தொடங்கிவிட்டனர்.
பலருக்கும்.. முக்கியமாக கிராமப்புற மாணவர்களுக்கு எங்கே படிப்பது, எந்த கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுப்பது என்பது போன்ற தெளிவான திட்டமிடல் இல்லை.

இந்த நிலையில்தான் இவர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எங்கே சேர வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று பல படிநிலைகளில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பம்:அதன்படி விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த ஆலோசனைகள் என அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனைகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications