டெல்லி மக்களின் மனநிலையில்தான் தமிழக மக்களும் உள்ளனர்: ராமதாஸ் எச்சரிக்கை
திண்டிவனம்: டெல்லியை போலவே தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரப்போகிறது என்று ஆரூடம் கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கருத்துக் கணிப்புகளையும் கடந்து, ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 70 இடங்களில் 65 இடங்களை வென்று ஆட்சியமைப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. ஆளும் கட்சியின் அனைத்து பலங்களையும் மீறி அசாதாரணமான வெற்றியை குவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆம் ஆத்மிக் கட்சியின் வெற்றிக்கான காரணங்களை அலசி ஆராயத் தேவையில்லை. அதன் வெற்றிக்கான காரணம் மிகவும் எளிமையானது. அரசு நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடந்த நிலையில், மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மக்களின் மனக்குமுறல்களை உணர்ந்திருந்தார். உணர்வுகளை மதித்தார். இதற்கெல்லாம் மேலாக தங்களின் எதிர்பார்ப்புகளை அரவிந்த் கேஜ்ரிவால் நிறைவேற்றுவார் என்று மக்களும் நம்பினார்கள். அதனால் ஆட்சியை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆம் ஆத்மியின் வெற்றி ரகசியம் இதுதான்.
அதே நேரத்தில் இந்த வெற்றியை அரவிந்த் கேஜ்ரிவால் பொறுப்புடன் கையாள வேண்டும். கடந்த காலங்களில் செய்தது போன்ற தவறுகளை அவர் மீண்டும் ஒருமுறை செய்துவிடக்கூடாது. இந்த அளவுக்கு பெரிய வெற்றி எனக்கு அச்சத்தைக் கொடுத்திருக்கிறது என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருப்பதில் இருந்தே அவர் மக்கள் விரும்பும் ஆட்சியை தருவார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
டெல்லி வாக்காளர்கள் எத்தகைய மனநிலையில் இருந்தார்களோ அதே மனநிலையில்தான் தமிழக வாக்காளர்களும் இருக்கிறார்கள். தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல்களால் மனம் வெறுத்துப் போயிருக்கும் மக்கள், மாற்றத்தை ஏற்படுத்த துடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த உண்மை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
இதனிடையே அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் தளத்தில், "இப்போது டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதை போலவே, அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாமக வெல்லும்" என்று கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications