அன்பழகன் சுரண்டை, ஸ்டாலின் தர்மபுரி, விஜயகாந்த் மதுரை, வைகோ குமரி..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியைத் தவிர மற்ற முக்கியத் தலைவர்கள் எல்லாம் நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வேன் மற்றும் பொதுக்கூட்ட தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு முழங்கவுள்ளனர்.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் முதல் அ.இ.ச.ம.க. தலைவர் சரத்குமார் வரை சகல தலைவர்களும் நாளை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

யார் யாரெல்லாம் நாளை தமிழகத்தில் உலா வருகிறார்கள் என்பது குறித்த ஒரு ரவுண்ட் அப்...

அன்பழகன்

அன்பழகன்

செங்கோட்டை மற்றும் சுரண்டையில் நாளை அன்பழகன் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

தர்மபுரியில் ஸ்டாலின்

தர்மபுரியில் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் நாளை தர்மபுரியில் திமுக வேட்பாளருக்காக பிரசாரம் செய்கிறார்.

ஸ்ரீபெரும்புதூரில் கனிமொழி

ஸ்ரீபெரும்புதூரில் கனிமொழி

திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. நாளை வாக்கு சேகரிக்கிறார்.

மதுரையில் விஜயகாந்த்

மதுரையில் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை மதுரையில் வேன் பிரசாரம் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் வைகோ

கன்னியாகுமரியில் வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை கன்னியாகுமரி தொகுிதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்காக வாக்கு சேகரிக்க வருகிறார்.

மகன் தொகுதியில் ப.சிதம்பரம்

மகன் தொகுதியில் ப.சிதம்பரம்

மகன் கார்த்தி சிதம்பரத்திற்காக சிவகங்கை தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ப.சிதம்பரம் பிரசாரம் செய்து பேசுகிறார்.

தேனி, பெரியகுளத்தில் வாசன்

தேனி, பெரியகுளத்தில் வாசன்

தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்காக ஜி.கே.வாசன் , தேனி பெரியகுளம் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

ஈரோட்டி்ல் தா.பா

ஈரோட்டி்ல் தா.பா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், ஈரோட்டில் வாக்கு சேகரிக்கிறார்.

ஜெயங்கொண்டத்தில் திருமா

ஜெயங்கொண்டத்தில் திருமா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஜெயங்கொண்டம் பகுதியில் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.

லால்குடி டூ மதுரை.. சரத்குமார்

லால்குடி டூ மதுரை.. சரத்குமார்

லால்குடி, அரியலூர், ஜெயங்கொண்டம், கும்பகோணம் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மதுரை என ஒரே நாளில் நாளை பல ஊர்களில் பேசவுள்ளாராம் சரத்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+