Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனுஷ்கோடியில் உருவான இயற்கையின் அற்புதம்.. நெகிழும் சுற்றுலா பயணிகள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல் நீரோட்டம் வேறு திசைக்கு திரும்பி மீண்டும் மணல் பரப்பு உருவாகி உள்ளது. இயற்கையின் அதிசயமான நிகழ்வான இது தனுஷ்கோடியில் அவ்வபோது நிகழும். இதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்து ரசிக்கிறார்கள்.

ராமேசுவரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை உள்ளது. சாலையின் இருபுறமும் கடல் சூழ காட்சிதரும் தனுஷ்கோடி உலகின் சிறந்த சுற்றுலாத்தளங்களில் ஒன்று. நாட்டின் பல்வேறு பகுதி மக்கள் தினமும் ராமேஸ்வரம் வருவார்கள், அப்படி ராமேசுவரம் கோவிலுக்கு வரக்கூடியவர்கள், அப்படியே வாகனங்களில் தனுஷ்கோடி சென்று, கடல் அழகை ரசித்து செல்வார்கள்.

இந்நிலையில் தனுஷ்கோடிக்கு எளிதாகச் சென்று வர வசதியாக, முகுந்தராயர் சத்திரத்திலிருந்து அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்டு, 2017 ஜுலையில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

அரிச்சல் முனை

அரிச்சல் முனை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தனுஷ்கோடி அரிச்சல் முனை எல்லையில் உள்ள சாலை வளைவை சுற்றி 3 கி.மீ. சுற்றளவில் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதி மணல் பரப்புடன் விசாலமாக இருந்தது. ஆனால் நாளடைவில் கடல் அரிப்பினால் அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றியிருந்த மணல்பரப்பு முழுவதும் கடலால் சூழப்பட்டது.

இயற்கை நிகழ்வு

இயற்கை நிகழ்வு

அதாவது தனுஷ்கோடி அரிச்சல்முனை தெற்கு கடற்கரை பகுதி, சில மாதங்களாக முழுவதும் கடலாக இருந்து வந்தது. அலையானது சாலையோர தடுப்புச்சுவர் வரை வந்து மோதியது. இங்கு ஆண்டின் சில மாதங்களில் மணல் பரப்புகளை கடல்நீர் விழுங்கி முழுவதும் கடலாக காட்சிதரும்.. பின்னர் கடல் நீரோட்டம் வேறு திசைக்கு திரும்பி மீண்டும் மணல் பரப்பாகிவிடும் இதுதான் இயற்கையான நிகழ்வு ஆகும்.

சிவலிங்கம்

சிவலிங்கம்

கடந்த சில நாட்களாகவே இயற்கை அதன் மாயாஜாலத்தை காட்டி உள்ளது. கடல் உள்வாங்கி, சாலையோரத்தில் இருந்து, ஒரு அகலமான மணல் சாலை போன்று மணல் பரப்பு உருவாகி இருக்கிறது. அந்த மணல் பரப்பில் இறங்கி நடந்துசென்று சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அங்கு சென்று மணலில் சிவலிங்கம் செய்தும், கடல் நீரை தலையில் தெளித்தும் வழிபடுகிறார்கள்.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

பலர் மணல் பரப்புக்குள் சென்று செல்போனில் 'செல்பி' எடுத்து மகிழ்கிறார்கள். தெற்கு கடல் பகுதியில் இவ்வாறு மணல் திட்டு உருவானாலும், அரிச்சல்முனை சாலைக்கு வடக்கே உள்ள கடலில், எந்த மாற்றமும் இன்றி முழுமையான கடலாகவே காட்சி தருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+