குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை.. கனமழை எச்சரிக்கையால் அலர்ட் ஆன மாவட்ட நிர்வாகம்!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதுமே கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கோடை விடுமுறையை ஒட்டி, பலரும் குளிர் பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வந்தனர்.

Tourists prohibited in Courtallam main falls due to heavy rain alert

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்திருக்கும் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாரல் பொழிந்து சீசன் நிலவும். கோடை காலத்தில் வெயில் தென்காசி மாவட்டத்திலும் வாட்டி வதைத்தது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் இதமான சூழல் நிலவியது. பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் சீராகக் கொட்டியது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தரத் தொடங்கினர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல வாரங்களுக்குப் பிறகு மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பொழிந்துள்ளது. நெல்லை, குமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மே 15, 16, 17, 18, 19 ஆகிய ஐந்து நாட்களுக்கு விருதுநகர், தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. தென்காசியில் செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பிரதான அருவியில் தற்போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+