கொளுத்தும் கோடை வெயில்: அகஸ்தியர் அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நெல்லை: கோடை வெயிலிலும் தண்ணீர் குறையாமல் கொட்டுவதால் பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதயில் பல அருவிகள் உள்ளன. குற்றாலம் மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் சீசன் காலத்தில் மட்டுமே தண்ணீர் விழும். களக்காடு மலைப்பகுதியில் உள்ள அருவிகளிலும் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் வரும். ஆனால் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

தற்போது கோடை வெயில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெளுத்து வருகிறது. இதில் சீசன் இல்லாததால் குற்றால அருவிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவிக்கு படையெடுத்து வருகின்றனர். விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியபடி இருந்தது.
அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் காலையிலேயே உணவு சமைத்து கொண்டு வந்து ஆனந்தமாக குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு நன்றாக ஓய்வெடுத்து விட்டு சென்றனர். பலர் வெகு தொலைவில் இருந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்பகுதியல் அடிப்படை வசதிகள் இல்லாததால் பலர் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதனால் குடிநீர், சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications