திமுக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு: பாளையில் மைதீன்கான் கொடும்பாவி எரிப்பு
நெல்லை: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மைதீன்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் கொடும்பாவியை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
வரும் மே 16 ஆம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் மும்முரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 9 தினங்களே உள்ள நிலையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. 173 தொகுதிகளுக்கான பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அதில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான மைதீன்கான் பெயர் இடம்பெற்றிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையில் அவரது கொடும்பாவியை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது தொடர்ந்து பாளை தொகுதி டிபிஎம் மைதீன்கானுக்கு கொடுப்பதாக குற்றம்சாட்டினர்.
அதேபோல் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எ.பி. நந்தகுமாரை மாற்றம் வேண்டும் என்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வேட்பாளர் டாக்டர் சதீஷை மாற்றக்கோரி கொத்தங்கலம், வடகாடு, அணவயல், மறமடக்கி மற்றும் உள்ளிட்ட இடங்களில் துண்டுபிரசுரங்களை திமுகவினர் விநியோகம் செய்தனர்.
-
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்











Click it and Unblock the Notifications