போலீஸ் வர்றாங்க... ஓவர் ஓவர்... 7 வாக்கி டாக்கிகளைத் தூக்கிக் கொண்டு ஓடிய சென்னை திருடர்கள்!
சென்னை: சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் 7 வாக்கி டாக்கி கருவிகள் திருடு போயுள்ளது. இது தொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ளது போக்குவரத்து போலீஸ் நிலையம். போக்குவரத்து போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கி கருவிகள் இந்த அலுவலகத்தில் தான் வைக்கப் பட்டிருக்கும். வாக்கி டாக்கி தேவைப் படும் போலீசார் அதனை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பதிவேட்டில் கையெழுத்து இட்டுச் செல்வது நடைமுறை.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு இந்த போக்குவரத்து அலுவலகம் வழக்கம் போல் மூடப்பட்டது. போக்குவரத்து போலீசார் பயன்படுத்தும் 7 வாக்கி டாக்கி கருவிகள் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று காலையில் வழக்கம் போல பணிக்கு வந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், அலுவலக கதவு பூட்டுகள் உடைக்கப் பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே வைக்கப் பட்டிருந்த 7 வாக்கி டாக்கிகளும் திருட்டு போய் இருந்தது. உடனடியாக இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி, இது தொடர்பாக விசாரணை நடத்தினார். மேலும்,இந்த திருட்டு தொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசாரே இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம், என்ற சந்தேகம் உள்ளதாகத் தெரிகிறது. திருட்டு நடந்த போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு முன்புதான் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையம் உள்ளது. உதவி கமிஷனர் அலுவலகமும் அங்குதான் இருக்கிறது. அங்கு இரவு விடிய, விடிய போலீசார் காவல் பணியில் இருந்துள்ளனர். அப்படி இருக்க வாக்கி டாக்கி கருவிகளை திருடியது யார், என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு காணாமல் போன சென்னை முக்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாக்கி டாக்கி இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை. சமீபத்தில் கூட விருகம்பாக்கம் போலீஸ்காரர் ஒருவரின் வாக்கிடாக்கி காணாமல் போனது. ஆனால், விரைந்து அந்த வாக்கி டாக்கி மீட்கப் பட்டது. அது தொடர்பாக இரண்டு கல்லூரி மாணவர்களும் கைது செய்யப் பட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் ஒரே நேரத்தில் 7 வாக்கி டாக்கிகள், அதுவும் போலீஸ் நிலைய பூட்டுகளை உடைத்து திருடப்பட்டிருப்பது சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications