சென்னையில் ஹெல்மெட் தகராறுக்காக இளைஞர் கையை போலீஸ் உடைத்தார்களா? நடந்தது என்ன? காவல்துறை விளக்கம்
சென்னை தியாகராய நகரில் தாய், சகோதரி கண்முன்னால் இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவல்துறையினர் தாக்கும் வீடியோ வைரலாகிவருகிறது.
Recommended Video

சென்னை: தியாகராய நகரில் தாய், சகோதரி கண்முன்னால் இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவல்துறையினர் தாக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோகுறித்து போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் சுதாகர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அந்த வீடியோ காட்சியில் கம்பத்தில் ஒரு இளைஞரை சாய்த்து வைத்துக்கொண்டு ஒரு காவல்துறை அதிகாரி பிடித்துக்கொண்டிருக்க, இன்னொரு போலீஸ் அந்த இளைஞரின் கையை போட்டு முறுக்குகிறார். அந்த இளைஞரின் கையோ, போலீசின் சட்டையை பிடித்துக்கொண்டிருக்கிறது. விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் கையை போட்டு அடித்து விடுவித்துக்கொள்கிறார் இளைஞர். அப்போது அங்கிருந்த பெண்கள் அடிக்காதீங்க என்று கதறுகின்றனர். இந்த வீடியோ காட்சிதான் வைரலாகி வருகிறது.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ். இவர் தனியார் கார் கம்பெனியில் டிரைவராகப் பணியாற்றுகிறார். நேற்று தனது, அம்மா, சகோதரியுடன் நேற்று பைக்கில் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: சமூக வலைதளத்தில் வெளியானது, நடந்த சம்பவத்தில் ஒருபகுதி மட்டுமே. ஆனால், முழு வீடியோவைப் பார்த்தால் போக்குவரத்து காவல்துறையினர் மீது தவறு இல்லை என்பது தெரியவரும்.
தி.நகர், உஸ்மான் சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தின் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், ஜெயராமன் ஆகியோர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6.30 மணியளவில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் வந்துள்ளனர்.
பைக்கை ஓட்டிய இளைஞர் ஹெல்மெட் அணியவில்லை. இதைப் பார்த்த போலீஸார், அந்த பைக்கை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது காவல்துறையினருக்கும் பைக்கில் வந்த இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அது தள்ளுமுள்ளாக மாறியது. சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷை முதலில் அந்த இளைஞர் தாக்கவே, அவரது இடது தோள்பட்டையில் இருந்த ஸ்டார் மற்றும் பட்டன்கள் அறுந்துள்ளன.
இதைப் பார்த்த இன்னொரு உதவி ஆய்வாளர் உடனடியாக அருகில் உள்ள மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரித்தனர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் ஆய்வுசெய்தனர். இதையடுத்து, சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் மாம்பலம் போலீஸார், பிரகாஷை கைதுசெய்துள்ளனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications