ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் களத்தில் குதிக்கும் "டிராபிக்" ராமசாமி.. ஜனவரி 23ம் தேதி வேட்பு மனு தாக்கல்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி போட்டியிடப் போகிறார். இதை அவரே அறிவித்துள்ளார்.
இதுவரை நான் நான்கு முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். வருகிற ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலிலும் நான் சுயேச்சையாக போட்டியிடப் போகிறேன் என்று கூறியுள்ளார் ராமசாமி. ஜனவரி 23ம் தேதி தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்யவுள்ளாராம்.

சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி, பல பொது நல வழக்குகள் போட்டு அரசியல் மட்டத்திலும், பிற மட்டத்திலும் பெரும் புயலைக் கிளப்பியவர் ஆவார். கட்டாய ஹெல்மட் உத்தரவு வரக் காரணமே இவர்தான். அதேபோல ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கொதித்தெழுவார். அதிமுக ஆட்சிக்கு எதிராக இவர் போட்ட வழக்குகள் பல. பெரும்பாலான வழக்குகளில் இவர் வென்றுள்ளார். வக்கீலாக இல்லை என்றாலும் கூட கோர்ட்டுகளில் திறம்பட பேசக் கூடிய திறமை படைத்தவர்.
சென்னை உயர்நீதிமன்றம் இவரது 2வது வீடோ என்று கேட்கும் அளவுக்கு பெரும்பாலான சமயங்களில் அங்குதான் இருப்பார். சமூக நல வழக்குகள் பலவற்றை போட்டுப் போட்டே தேய்ந்து போய் விட்டதோ இவரது உடல் என்று கேட்கும் அளவுக்கு ஒல்லியான தேகத்துடன் காணப்பட்டாலும் இரும்பு இதயத்துடன், உறுதியுடன் தொடர்ந்து போராடி வரும் ஒரு சமூகப் போராளி.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் இவரும் போட்டியிட வருவதால், அங்கு நடைபெறும் தேர்தல் விதிமுறைகளுக்கு நிச்சயம் பெரும் ஆப்பாக அமைவார் என்பதில் சந்தேகமில்லை. எனவே தேர்தல் களம் கண்டிப்பாக பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications