ஜெ., வெற்றியை எதிர்த்து டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஜீன் 27 ஆம் தேதி ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், அதிமுக சார்பில் ஜெயலலிதாவும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரனும், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் போட்டியிட்டனர். இதில், ஜெயலலிதா ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனை எதிர்த்து டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், சென்னை ஆர்.கே. நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு, கடந்தாண்டு ஜூன் 27-இல் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அதே தொகுதியில், நானும் போட்டியிட்டேன். பல்வேறு முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் வெற்றியை செல்லாது என்றும் அறிவிக்குமாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் யாரும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால், டிராபிக் ராமசாமி சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications