ஆளுநரை சந்திக்க வேண்டும்.... டிராபிக் ராமசாமி மீண்டும் தற்கொலை மிரட்டல்!
ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கித் தர கோரி டிராபிக் ராமசாமி சென்னை பாரிமுனையில் மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து வருகிறார்.
சென்னை: ஆளுநரை சந்திக்க இன்று மாலை 3 மணிக்குள் அனுமதி கிடைக்காவிட்டால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மிரட்டல் விடுத்து வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஊழலில் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அதிமுக ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி சென்னை பாரிமுனையில் உள்ள தனது அலுவலகத்தின் மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார் டிராபிக் ராமசாமி.

4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவரை போலீஸார் வலுக்கட்டாயமாக கீழே இறக்கி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தானாக முன்வந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த 25-ஆம் தேதி பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
எனினும் அவரது கோரிக்கை நிறைவேற வில்லை. இந்நிலையில் பாரிமுனையில் உள்ள தனது அலுவலகத்தின் மாடியில் நின்று கொண்டு ஆளுநரை சந்திக்க நேரம் கிடைக்காவிட்டால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று டிராபிக் ராமசாமி மிரட்டல் விடுத்து வருகிறார்.
போலீஸார் சமாதானம் பேசியும் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். பிற்பகல் 3 மணிக்குள் தன்னை சந்திக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார். மேலும் தனது சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் உடலில் ஒட்டிக் கொண்டுள்ளார். இதனால் பாரிமுனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications