மெட்ரோ ரயில் பணியின்போது ரசாயன கசிவு - அண்ணா சாலையில் போக்குவரத்து 'ஜாம்'
சென்னை:மெட்ரோ ரயில் பணியின் போது ரசாயனம் வெளியேறியதால் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அண்ணா சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியின்போது ரசாயனக் கலவை வெளியேறியதால் வியாழக்கிழமை மாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஒரு வகையான ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனத்தை கலக்கும் பணி வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது. அப்போது மணலுடன் சேர்ந்த ரசாயன நீர் சாலையில் வெளியேறியது.
இதன் காரணமாக அண்ணா சாலை - வாலாஜா சாலை இடையே வாகன நெரிசல் ஏற்பட்டு, 30 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெளியேறிய ரசாயன நுரையுடன் மணலும் கலந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். பின்னர் சிறிது நேரம் கழித்து அண்ணா சாலையில் போக்குவரத்து சீரானது.
இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி "திடீரென இத்தகைய ரசாயன நீர் வெளியேறிவிட்டது. இது சுரங்கம் தோண்டுவதற்காக தினமும் பயன்படுத்தப்படுவதுதான். சுமார் 3 மணி நேரத்துக்குப் பின், சாலையில் கசிந்த நுரை கலந்த மணல் அப்புறப்படுத்தப்பட்டது. சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட்ட இயந்திரப் பாகங்களும் சரிந்ததால், அப்புறப்படுத்த தாமதம் ஆகிவிட்டது" என்று கூறினார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications