எழும்பூரில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து - பயணிகளுக்கு காயமில்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஒன்றாவது நடைடையில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் எஞ்சினை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் பல பகுதிகளிலும் ரயில்கள் தடம் புரண்டு விபத்தில் சிக்கி வருகின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் அடிக்கடி ரயில்கள் தடம் புரண்டு விபத்தில் சிக்குகின்றன.

Train derails in Chennai Egmore station

இந்த நிலையில் சென்னையில் ஒன்றாவது நடைமேடையில் ரயில் எஞ்சின் தடம் புரண்டுள்ளது. பணியாளர்கள் எஞ்சினை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் செங்கோட்டை செல்லும் ரயில் தாமதமாக செல்லும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Train derailment at first platform in Chennai egmore station
Please Wait while comments are loading...