பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களுக்கான முன்பதிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்போர், படிப்போர் என லட்சக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

கொள்ளை லாபம்
அந்த சமயங்களில் பண்டிகையை முன்னிட்டு, ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். இதுபோன்ற நேரங்களில் தனியார் பேருந்துகள் டிக்கெட்களின் விலையை உயர்த்தி கொள்ளை லாபம் அடிப்பர்.

ரயிலை விரும்பும் மக்கள்
அதுவும் இல்லாமல் தற்போது அரசுப்பேருந்துகளின் கட்டணங்கள் மிரண்டு ஓடக்கூடிய அளவுக்கு உயர்ந்துள்ளது. அதனால் பெரும்பாலான மக்கள், ரயிலையே பயன்படுத்த துவங்கிவிட்டனர். அதுவும் இல்லாமல் ரயில் பயணம் களைப்பின்றி செல்லக்கூடிய பிரயாணமாகவும் இருப்பதால் இதற்கே பொதுமக்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர்.

விற்று தீர்ந்தன
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடிவெடுத்தது.அதன்படி, ஜனவரி 11-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே எல்லா டிக்கெட்களும் நிறைவடைந்தன. இதனால் காத்திருந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

பயணிகள் கோரிக்கை
ஜனவரி 12-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளையும், ஜனவரி 13-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாளும், 14-ம் தேதிக்கு ஞாயிற்றுக்கிழமையும் தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. போகிற போக்கை முன்பதிவுக்கான தினங்களிலும்கூட டிக்கெட்கள் அனைத்தும் விற்றுமுடிய நேரிடும் என்பதால், கூடுதலாக போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பயணிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications