ரயில்கள் ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு: எஸ்.எம்.எஸ் எச்சரிக்கையை ரத்து செய்த ஐ.ஆர்.சி.டி.சி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இருந்து டேராடூன் செல்லும் வாராந்திர ரயில், பெங்களூரூ பாட்னா சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நான்கு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல இணை ரயில் ரத்து காரணமாக, சென்னை சென்ட்ரல் - ஜம்முதாவி, புதுச்சேரி - டெல்லி இடையே இயக்கப்படும் ரயில்கள், இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ரயில்கள் ரத்தான தகவல், இனிமேல், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்புவதில்லை என, இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) முடிவு செய்துள்ளது.

Trains cancelled on today

இது குறித்து சென்னை ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரையில் இருந்து டேராடூன் செல்லும் வாராந்திர ரயில், பெங்களூரூ பாட்னா சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் , கோவை-நிஜாமூதின் வாராந்திர ரயில், சென்னை சென்ட்ரல், டில்லி செல்லும் கிராண்ட் டிரங்க், ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல இணை ரயில் ரத்து காரணமாக அதிகாலை, 5:15 மணிக்கு, சென்னை சென்ட்ரலில் இருந்து ஜம்முதாவிக்கு செல்லும், வாரம் மூன்று முறை, அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. காலை, 9:05 மணிக்கு, புதுச்சேரியில் புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக டில்லி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ் கிடையாது

ரயில்கள் ரத்தான தகவல், இனிமேல், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்புவதில்லை என, இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் கலவரம்

கடந்த மே மாதம், ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த குஜ்ஜார் இன மக்களின் ரயில் மறியல் போராட்டம் காரணமாக, 70க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்த தகவல்களை, ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் பயணிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் அளித்து வந்தது.

குழம்பிய பயணிகள்

கடந்த மாதம் 28ம் தேதி, இப்படி ஒரு எஸ்.எம்.எஸ். 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு வந்தது. ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன், இந்த எஸ்.எம்.எஸ். வந்த காரணத்தால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

தவறவிட்ட பயணிகள்

இதன் காரணமாக, ரயில்களை தவறவிட்ட, ஏறக்குறைய, 7,000 பயணிகள், தவறான தகவல் தந்தது மற்றும் பயணக் கட்டணம் திரும்ப அளிக்காததற்கான காரணத்தை கூறும்படி, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு, மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளனர்.

தவறான எஸ்.எம்.எஸ்

இதுகுறித்து, கருத்து கூறியுள்ள ஐ.ஆர்.சி.டி.சி.,யின் குழு பொது மேலாளர் (ஐ.டி.,) சுனில் குமார் ஒரே நாளில் மட்டும், 34 ஆயிரம் எஸ்.எம்.எஸ்.,கள் தவறாக அனுப்பப்பட்டு உள்ளன. குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றவர்கள் 7,000 பேர் மட்டும், ரயில்களை தவறவிட்டு உள்ளனர்.

எஸ்.எம்.எஸ் ரத்து

இவர்களுக்கு, பயண டிக்கெட்டுக்கான பணம் முழுவதும் கிடைக்காவிட்டாலும், குறிப்பிட்ட அளவு வழங்கப்படும். இனிமேல், ரயில்கள் ரத்தான தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்புவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+