முக்கிய துறைகளை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி ஆக்ஷன்!
சென்னை: தமிழகத்தில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நிர்வாக வசதி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அரசு உயர் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழக அரசின் பல்வேறு முக்கிய தூறைகளை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யபப்ட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

* நில நிர்வாகத்துறை ஆணையர் எஸ். நாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* வேளாண் துறை ஆணையர் எஸ். சுப்பிரமணியன் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராக இருந்த கே.எஸ் பழனிசாமி ஐ.ஏ.எஸ் நிலவளத்துறை நிர்வாக இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சமூக நலத்துறை முதன்மை செயலாளர் கன்சோங்கம் ஜடக் சிரு, மீன் வளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications