காவல் நிலையம் அருகே தீக்குளித்து திருநங்கை பலி.. சென்னையில் பயங்கரம்
திருநங்கை ஒருவர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து இறந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை: சென்னையில் காவல்நிலையம் அருகே திருநங்கை ஒருவர் தீக்குளித்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை தாரா. நேற்று அதிகாலை பாண்டிபஜார் பகுதியில் உள்ள காவல்நிலையம் அருகே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு நின்று திருநங்கைகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பாண்டி பஜார் சப்-இன்ஸ்பெக்டர் டில்லி, போலீஸ்காரர் மணி கண்டன் மற்றும் போலீசார் ரோந்துவாகனத்தில் வந்தனர்.

சந்தேகத்தின் பேரில் திருநங்கைகளிடம் போலீசார் விசாரித்தனர். அப்பொழுது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. உடனே 3 திருநங்கைகள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து பைக்குடன் நின்று கொண்டிருந்த தாராவை மட்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அதிகாலை 4.30 மணிக்கு போலீசார் தாராவை வீட்டுக்கு சென்றுவிட்டு காலையில் வந்து மொபட்டை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினர்.அதற்கு தாரா மறுப்பு தெரிவித்து பைக்கை உடனே தரும்படி கேட்டார். போலீசார் மறுத்து விட்டதால் ஆவேசத்துடன் வெளியே சென்ற அவர் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி வந்து போலீஸ் நிலையம் முன்பு திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தாக கூறப்படுகிறது.

எரியும் தீயுடன் அவர் அலறி துடித்ததை பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தீயை அணைத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி தாரா இறந்தார். திருநங்கை தாரா தீக்குளித்ததை அறிந்த திருநங்கைகள் கீழ்பாக்கம் மருத்துவமனை முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்ற போது திருநங்கைகள் தாக்கவும் முயற்சித்தனர். போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் மறியலும் செய்தனர்.

இதனால் கீழ்பாக்கம் மருத்துவமனை முன்பு பெரும் பதட்டம் நிலவியது. போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications