மிருகங்களை விட கேவலமானவர்களா திருநங்கைகள்?: லிவிங் ஸ்மைல் வித்யா கொதிப்பு
சென்னை: ஐ படத்தில் தங்களை தவறாக சித்தரித்த இயக்குநர் சங்கரும், நடிகர் விக்ரமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திருநங்கைகள் வலியுறுத்தியுள்ளனர். மிருகங்களை விட நாங்கள் கேவலமானவர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இயக்குநர் ஷங்கர் பதில் சொல்லும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று 'ஐ' படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் எச்சரித்தனர்.
'ஐ' படத்தை எதிர்த்து திங்கள்கிழமை காலை சென்னையில் தணிக்கைக் குழு அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. 'லிவிங் ஸ்மைல்' வித்யா, பானு, ரோஸ் உள்ளிட்ட திருநங்கைகள் பலர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கேலிக்கூத்தா
'திருநங்கை என்ன உங்களுக்கு கேலிக்கூத்தா? திருநங்கை காதல் என்ன உங்களுக்கு வக்கிரமா? திருநங்கைகள் ஆதரவற்றவரா? குரலற்றவரா? இயக்குநர் ஷங்கரை கைது செய்' என்ற முழக்கங்கள் இடப்பட்டன.
இது முதற்கட்டப் போராட்டம்தான். ஷங்கரும், தணிக்கை வாரியமும் உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ திருநங்கை குறித்த தவறான சித்தரிப்புக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். அதுவரை ஓயமாட்டோம்'' என்று பானு கூறினார்.
இதையடுத்து, தணிக்கைக் குழு அதிகாரி பக்கிரிசாமியிடம் பேசிய பானு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, '' 'திருநங்கைகளை இழிவு படுத்தும் காட்சிகள் விரைவில் நீக்கப்படும். இனிமேல், இது போன்ற காட்சிகள் இடம்பெறாது. திருநங்கைகள் குறித்து படத்தில் காட்சி வருமாயின், அது குறித்து படம் பார்க்க திருநங்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்' என பக்கிரிசாமி உறுதி அளித்துள்ளார்'' என்று பானு தெரிவித்தார்.

கண்ணியம் வேண்டும்
இதனிடையே, நாடக நடிகையும், திருநங்கையுமான, லிவிங் ஸ்மைல் வித்யா பேசுகையில், ''திரைப்படங்களில் திருநங்கைகளை கண்ணியமாகக் காட்ட வேண்டும். கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. ஒரு பால் ஈர்ப்பினர், திருநங்கைகளை தாக்கும் வசனங்களுக்கு இடம் தரக்கூடாது' என்றார்.

காட்சிகளை நீக்குங்கள்
'ஐ' படத்தின் கதையைப் பாதிக்காமல், திருநங்கைகளை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை மட்டும் நீக்க வேண்டும்.

மிருகங்களை விட
மிருகங்கள் துன்புறுத்தப்படவில்லை, மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என டைட்டிலில் அறிவிக்கிறார்கள். ஒரு நாய் மேல காட்டும் மரியாதையை மனிதர்களாகிய எங்கள் மீது காட்டாதது ஏன்? இது குறித்து வழக்கு போட முயற்சித்து வருகிறோம்" என்று 'லிவிங் ஸ்மைல்' வித்யா தெரிவித்தார்.

போலீஸ் பாதுகாப்பு
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள இயக்குநர் ஷங்கரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications