ஐ மாதிரி கேவலமான படத்துக்கு எப்படி சென்சார் சான்று கொடுத்தீங்க?- திருநங்கைகள் ஆவேசம்
சமூகத்தில் ஒரு அங்கமாகத் திகழும் திருநங்கைகளை மிகக் கேவலமாக சித்தரிக்கும் ஐ படத்துக்கு எப்படி தணிக்கைச் சான்றிதழ் தரலாம்.. அந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி திருநங்கைகள் இன்று சென்னை சாஸ்திரி பவன் எதிரே ஆவேச போராட்டம் நடத்தினர்.
ஷங்கரின் ஐ படத்தில் வரும் திருநங்கை பாத்திரம் தங்களை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி திருநங்கைகள் சமூகம் கொதிப்படைந்துள்ளது.

இந்தப் படத்துக்கு கண்டனம் தெரிவித்து இயக்குநர் ஷங்கர் வீட்டு முன் சில தினங்களுக்கு முன் போராட்டம் நடத்தி திருநங்கைகள் இன்று, சென்னையில் உள்ள தணிக்கை குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநங்கைகள் டாக்டர் செல்வி, எஞ்ஜினியர் பானு ஆகியோர் இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர். ஏராளமான திருநங்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

சமூகத்தில் ஒரு அங்கமாகிவிட்ட, மெல்ல மெல்ல அங்கீகாரம் பெற்றுவரும் திருநங்கைகளை இந்த அளவு கேவலப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஐ படத்துக்கு எப்படி தணிக்கை சான்றிதழ் தரலாம் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் பிராந்திய தணிக்கைத் துறை அலுவலர் பக்கிரிசாமியைச் சந்தித்து தங்கள் எதிர்ப்பையும், படத்துக்கு தடை கோரும் மனுவையும் அளித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications