கோவை, வேலூர், திருச்சி, கரூர் உள்பட பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தம்.. மக்கள் கடும் பாதிப்பு
கோவை, வேலூர், நீலகிரி, கரூர், திருச்சி, தஞ்சை, தேனி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோவை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து கோவை, வேலூர், நீலகிரி, கரூர், திருச்சி, தஞ்சை, தேனி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளை அறிவித்த வேலைநிறுத்த போராட்டத்தை தொழிலாளர்கள் இன்றே தொடங்கினர்.

அதனை தொடர்ந்து திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலுக்கு பிறகே பேருந்துகள் நிறுத்தப்பட்டன. திடீரென பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வெளியூர் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடந்து அரியலூர் 50 க்கும் மேற்பட்ட பேருந்துக்கள் டெப்போக்குள் நிறுத்தப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் பேருந்து நிலையத்தில் இயக்கப்படாமல் பணிமனைக்கு திருப்பிவிடபட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் பகுதிகளில் பேருந்துகள் ஓடாததால் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
தாராபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல் துணை கண்காணிப்பாளர் வேலுமணி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர், குளித்தலையிலும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. கோவை, வேலூர், நீலகிரி, திருச்சி, தஞ்சை, தேனி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலைமை நீடித்தால் நாளை தமிழகமே ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications