கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் 15 நாள் உயிரோடு இருக்க வாய்ப்பு- மருத்துவ கல்வி இயக்குனர்
சென்னை: போரூர் கட்டிட விபத்தில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்கள் 15 நாட்கள் வரை உயிரோடு இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவ கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனியன்று மாலை சென்னையில் இடியுடன் கூடிய திடீர் மழை பெய்தது. இதில், போரூர் மவுலிவாக்கம் பகுதியில் உள்ள 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில், அக்கட்டிடத்தின் அடித்தளத்தில் தங்கியிருந்த கட்டிட ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதுவரை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுமையாக மீட்புப் பணிகள் முடிவடையாததால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதற்கிடையே கட்டிட இடிபாடு நடந்த இடத்தில் துர்நாற்றம் எழுவதால் இடிபாடுகளில் சிக்கியவர்களின் நிலை குறித்து அச்சம் எழுந்துள்ளது.
மீட்புப் பணி தொடர்ந்து 4-வது நாளாக நடந்து வரும் நிலையில் உயிரோடு இருக்கும் தொழிலாளர்களை மீட்க சாதுர்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடிந்து விழுந்த கான்கிரீட் தூண்கள், சிலாப்கள், மேற்கூரைகளுக்கு அடியில் உயிருடன் இருப்பவர்களை மீட்க மீட்பு குழுவினரும், டாக்டர்கள் குழுவினரும் போராடி வருகிறார்கள்.
மீட்பு பணியில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, சுகாதாரப் பணிகள் இயக்குனர் தலைமையில் 30 டாக்டர்கள் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், விபத்து நடந்து 72 மணி நேரம் (3 நாட்கள்) முடிந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் உயிருடன் இருப்பார்களா? அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா? என்பது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :-
15 நாட்கள்...
ஒரு மனிதன் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல், ஆகாரம் உட்கொள்ளாமல் 15 நாட்கள் வரை உயிரோடு இருக்கலாம். அவரது உடல் வலிமை, மன தைரியத்தை பொறுத்து இது அமைந்துள்ளது.
மயக்க நிலை...
எதுவும் சாப்பிடாமல் ஒரு வாரம் வரை கட்டாயம் இருக்க முடியும். அதற்கு மேலாக அவரது சிறுநீரகம் பாதிக்கக்கூடும். சிறுநீரகம் பாதித்தாலும் அவர் உயிருடன் இருக்க முடியும். உடலில் நீர்சத்து குறைந்து விடுவதால் மயக்கமான நிலையில் காணப்படுவார்.
முதல்வர் உறுதி...
அந்த அடிப்படையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் ஊழியர்களை உயிரோடு மீட்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார்.
மீட்புப் பணி நிதானம்...
அதனால் மீட்பு பணியில் விவேகமாக செயல்பட வேண்டியுள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பவர்கள் மீது கான்கிரீட் துண்டுகள் விழுந்து அழுக்கி விடக்கூடாது என்பதற்காக மீட்பு பணிகள் நிதானமாக நடக்கின்றன.
காற்றுக் குழாய்...
இடிபாடுகளில் இருந்து மீட்கப்படுபவர்களுக்கு உடனடியாக காற்று குழாய் மூலம் முதலுதவி அளிக்கப்படுகிறது. இருதயத்தை அமுக்கி அதன் செயலாக்கி டாக்டர்கள் உறுதி செய்தனர்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம்












Click it and Unblock the Notifications