தங்கப் புதையல்... மனைவியை விருந்தாக்கி 8 பேரை கொன்ற சப்பாணி- திருச்சியில் தோண்ட தோண்ட சடலங்கள்!!
சென்னை: தங்கப் புதையல் ஆசைகாட்டி சபலிஸ்டுகளை மடக்கி அவர்களுக்கு மனைவியையே விருந்தாக்கி 8 பேரை நரபலி கொடுத்ததாக சப்பாணி என்பவர் ஒப்புக் கொண்டதால் திருச்சி போலீசார் அதிர்ந்து போயுள்ளனர்.
திருச்சியில் கார் டிரைவர் தங்கதுரை அண்மையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சப்பாணி என்பவரை பிடித்தனர்.
அவரிடம் தங்கதுரையின் மொபைல் போன் இருந்ததால் சிக்கினார். தொடர்ந்து சப்பாணியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்களை கக்கியிருக்கிறார்.

தங்கப் புதையல் கொலைகள்
தன்னுடைய தந்தை உட்பட 8 பேரை கொலை செய்து பாசன வாய்க்கால் பகுதிகளில் புதைத்து வைத்திருப்பதாகவும் சப்பாணி ஒப்புக் கொண்டார். இந்த கொலைகளுக்கு அடிப்படை காரணமே தங்கப் புதையல்தானாம்.

மனைவியை விருந்தாக்குவது..
பணக்காரர்களை குறி வைத்து தங்கப் புதையல் இருப்பதாக நம்ப வைப்பது சப்பாணியின் வேலை. அப்படி பணத்துடன் தங்கப் புதையலை தேடி தம்முடன் வருபவர்களுக்கு மனைவியையே முதலில் விருந்தாக்குவது சப்பாணி ஸ்டைல்.

வாய்க்காலில் புதைப்பது...
இந்த விருந்து முடிந்தவுடன் அவர்களது கதையை முடித்து வாய்க்காலில் புதைத்துவிட்டு அவர்களிடம் பணத்தை அபேஸ் செய்து ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார் சப்பாணி. கடந்த 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 8 பேரை அவர் இப்படி கொலை செய்திருக்கிறார்.

கள்ளகாதலுடன் ஓடிய மனைவி
இதனிடையே மனைவி மோகனப் பிரியா கள்ளக் காதலனுடன் ஓடிவிட்டார். அவரையும் தேடி கொலை செய்யும் வெறியில் அலைந்து திரிந்திருக்கிறார் சப்பாணி. இதனிடையேதான் தங்கதுரை சிக்க அவரையும் போட்டுத் தள்ளி இப்போது போலீசில் பிடிபட்டிருக்கிறார்.

தோண்ட தோண்ட சடலங்கள்...
சப்பாணியின் இந்த வாக்குமூலத்துக்கு அப்பால் தங்க புதையலை தேடும் நரபல் கும்பலுக்காக இக்கொலைகளை அவர் செய்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் சப்பாணி குறிப்பிட்ட இடங்களில் போலீசார் தோண்டிப் பார்த்தனர். அப்போது தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்தன. இது திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications