திருச்சியில் இன்று முதல் 18ம் தேதிவரை பொதுக்கூட்டங்களுக்கு தடை.. கமல் பொதுக்கூட்டம் கதி?
திருச்சியில் இன்று முதல் 18-ஆம் தேதி வரை பொது கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
திருச்சி: திருச்சியில் இன்று முதல் 18-ஆம் தேதி வரை பொது கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கமல் நாளை நடத்தும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வாங்கியுள்ளதால் அந்த கூட்டத்துக்கு தடை இல்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தினர். பின்னர் டிடிவி தினகரனும், விவசாயிகளும் ஊர்வலமாக சென்று திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு திருச்சியில் இன்று முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் திருச்சியில் நாளை மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக சென்னை எழும்பூரிலிருந்து கமல் திருச்சிக்கு ரயில் மூலம் சென்றுள்ளார்.
இந்த பொது கூட்டத்துக்கும் தடை விதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமல்ராஜ் கூறுகையில்,
கமல் கூட்டத்துக்கு எந்த தடையும் இல்லை. அவர் கூட்டத்துக்கு ஏற்கெனவே அனுமதி உள்ளதால் எந்த பிரச்சினையும் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications